நுணுக்கமாக காரியங்கள் செய்யும் மகர ராசி அன்பர்களே!
முயற்சியோடு செயல்பட்டு, பல காரியங்களில் வெற்றியடைவீர்கள். நீண்ட காலமாக தடைபட்டு வந்த காரியங்களில் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள். எதிர்பார்க்கும் பணவரவு தடையின்றி வந்து மகிழ்வூட்டும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பள பாக்கி, எதிர்பார்த்த கடன் தொகை வந்துசேரும். சொந்தத் தொழிலில் புதிய வேலைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மூலப்பொருட்களை வாங்கிச் சேகரிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் கணிசமாக அதிகரிக்கும். குடும்பத்தில் சீரான போக்குக் காணப்படும். சிறு கடன்களைத் தீர்த்து, தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களில் இருந்து வந்த ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரம் கணிசமான லாபம் ஈட்டித் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.