தருமம் செய்வதில் ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே!
சனிக்கிழமை பகல் 1.09 மணி முதல் திங்கள் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானித்து முடிவெடுங்கள். நீண்ட காலமாக சந்திக்க நினைத்த ஒரு முக்கிய நபரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு, பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும், இடமாற்றமும் வரக்கூடும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் பணிகளில் அதிகக் கவனத்தோடு செயல்படாவிட்டால் மீண்டும் அதே பணியைச் செய்ய நேரிடலாம். கூட்டுத் தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் காணப்படும். பணப்பொறுப்பில் உள்ளவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றி அகலும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதிக்கு வெண் தாமரை மலர் சூட்டி வணங்கி வாருங்கள்.