மற்றவர்களை எடைபோடும் திறன்மிக்க மகர ராசி அன்பர்களே!
இந்த வாரம் மகத்தான காரியத்தை சுலபமாக செய்ய வாய்ப்பு தேடி வரும். காணாமல் போன ஒரு பொருள் கிடைக்கும். சிலர் பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காண்பீர்கள். கூட்டுத்தொழில் வாரம் முழுவதும் சீராக நடைபெற்று, வியாபாரிகள் உற்சாகமடைவார்கள். கலைஞர்கள் பெரிதாக நன்மை எதையும் அடையமுடியாது. என்றாலும் சிறிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே இணக்கமான போக்கு நிலவும். நீங்கள் தேடிக் கொண்டிருந்த நபர், தாமாகவே உங்கள் முன்பாக வந்து நிற்பார். மனதில் சங்கடங்கள் தோன்றி மறையும்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்குங்கள்.