மகரம் - வார பலன்கள்

Update: 2023-01-19 19:59 GMT

சோகத்தை மறைத்து உற்சாகமாக பணியாற்றும் மகர ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் உள்ளவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை, தாமதங்கள் உருவாகலாம். செய்யும் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வேண்டியதிருக்கும். உயர் அதிகாரியின் அனுகூலம் இருந்தால்தான், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்பதால், அவரை அனுசரித்துச் செல்லுங்கள்.

திருமண முயற்சிகள் இப்போது நல்லவிதமாக கைகூடும். தொழில் காரணமாக வேறு வேறு இடங்களில் பணியாற்றிய தம்பதியர், இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, தொண்டர்களால் சில நன்மைகள் உண்டாகும்.

வேலை தேடி அலைந்தவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். காவல் துறை, தீயணைப்புத்துறையினருக்கு பொறுப்புகளும், வேலைப்பளுவும் அதிகமாகும். தெய்வீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கினால் அற்புதம் நிகழும்.

மேலும் செய்திகள்