சிந்தனை வளத்தால் பணிகளை சிறப்பாக்கும் மகர ராசி அன்பர்களே!
செவ்வாய் காலை 8.33 மணி முதல் வியாழன் மாலை 6.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி உயர்வு வந்துசேரும். ஒரு சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் கிடைத்தாலும், அங்கேயும் உங்களின் தனித்தன்மையால் சிறந்து விளங்குவீர்கள்.
தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் வேகமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருப்தியான லாபத்தால் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் தோன்றும். கலைஞர்கள் மிகவும் புகழ்வாய்ந்த நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெறுவர்.
குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே இனிய சூழ்நிலை நிலவும். சிறு விஷயங்களில் வாக்குவாதம் உண்டாவதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஒரு சிலர் விருந்துகளில் பங்கேற்று களிப்பில் ஈடுபடுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.