இந்த வாரம் வியாழக்கிழமை 10:37 முதல் சந்திராஷ்டம் உள்ளதால் சிறுசிறு தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் காரியங்கள் தள்ளிப்போக நேரலாம். சொந்தத் தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் கைகொடுக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபத்துக்கு குறையாது. பணப் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் திருமண முயற்சிகள் வெற்றி தரும். கலைத்துறையினர் நிகழ்ச்சிகளில் பங்குபெற வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் ஏற்படக்கூடும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவக்கிரக சன்னிதியிலுள்ள சுக்கிர பகவானை வலம் வந்து வழிபடுவது நல்ல திருப்பத்தைத் தரும்.