எதிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில் மாறுதல் சாதகமாக இருந்தாலும், வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் மன உளைச்சல் வரலாம். குடும்பத்தில் சுமுகமான நிலை தென்படும். பெண்களின் சாமர்த்தியமான நிர்வாகத்தால் சிறு சிறு சச்சரவுகள் தவிர்க்கப்படும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாய கருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுங்கள்.