கடகம் - வார பலன்கள்

Update: 2022-10-20 19:55 GMT

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

காரியங்களை திட்டமிட்டு செய்யும் கடக ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையாக செயல்பட்டு, உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். பதிவேடுகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். பார்க்கும் தொழில் ஆதாயம் தரும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஆர்வத்தோடு பணிபுரிவர். அவர்களது தேவையறிந்து உதவி செய்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் பயனுள்ளதாக அமையும். கலைஞர்கள், தங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தை சந்திப்பார்கள். வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். கடினமான பணிகளில் ஈடுபடுவோர், கவனமாக இருக்காவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பேச்சில் தென்படும் இனிமை, உங்கள் மதிப்பை உயர்த்தும். குடும்பத்தில் சிறு சிறு தொல்லைகள் இருந்தாலும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. திட்டமிட்ட மங்கள நிகழ்ச்சிகள் இல்லத்தில் நல்லபடியாக நடைபெறும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் பொன்னும், புகழும் வந்துசேரும்.

மேலும் செய்திகள்