உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டியதிருக்கும். தொழி லில் வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி, முக்கிய வேலையை விரைவாகச் செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபகாரியங்கள் நல்லபடி யாக நடைபெறும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.