கட்டளை இடும் திறமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
வெள்ளி காலை 7.54 மணி முதல் ஞாயிறு பகல் 12.43 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை அளிக்கும். உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். கடந்த கால கசப்பு உணர்வு மாறும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். பணிகளை அவசரமாக முடிக்க விரைந்து செயல்படுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். மூலப்பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணப்பொறுப்பில் உள்ளவர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள் புதிய பணிகளில் மகிழ்வுடன் ஈடுபடுவர். பங்குச்சந்தை வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு மலர் மாலை அணிவித்து வணங்குங்கள்.