மேஷம் - வார பலன்கள்

Update: 2023-01-26 19:46 GMT

கலைகளில் அதிக ஈடுபாடு கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

வரவேண்டிய பண வரவுகள் திட்டமிட்டபடி வந்து சேரும். பல காரியங்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில், சிலர் தங்கள் வேலையை விட்டு, அதிக ஆதாயமுள்ள பணிக்குச் செல்ல முயல்வார்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை மீண்டும் சரி செய்து கொடுக்க நேரலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தில் குறையிருக்காது. கூட்டாளிகளில் ஒருவர், பிரிந்து சென்று தொழில் தொடங்கலாம். குடும்பம் சீராக நடைபெறும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களில் இருந்து புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.

பரிகாரம்:- புதன்கிழமை சுதர்சனப் பெருமாளுக்கு, துளசி மாலை சூட்டி வழிபட்டால் சகல நலன்களும் உண்டாகும்.

மேலும் செய்திகள்