எடுத்த காரியங்கள் பெரும்பாலும் வெற்றியாகவே முடியும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவார்கள். தொழில் துறையில் இருப்பவர்கள், கூட்டாளி களின் ஒத்துழைப்பு இன்றி, சொந்த முயற்சியிலேயே வளர்ச்சியை எட்டுவார்கள். குடும்பத்தில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். இந்த வாரம் திங்கட்கிழமை, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.