அயராத உழைப்பால் வெற்றிபெறும் மேஷ ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். புதியவர்களிடம் கவனமாக நடந்துகொள்வது அவசியம். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், ஊழியர்களின் சுறுசுறுப்பும் அதிக லாபம் பெற உதவும். பணத்தை வெளியில் கொண்டு செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் பண நடமாட்டமும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். நீதிமன்ற வழக்குகளில் திருப்பம் ஏற்படும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளால் ஆதாயமும், புகழும் உயரும். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.