தமிழ்நாடு டேலி எம்.எஸ்.எம்.இ விருதுகள் - 2023

டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவிலான 'எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ்' விருதுகளின் 3-வது பதிப்பை அறிமுகம் செய்துள்ளது

Update: 2023-07-24 10:55 GMT

ர்வதேச எம்.எஸ்.எம்.இ தினத்தை முன்னிட்டு, மென்பொருள் தயாரிப்புத் துறையில் முன்னோடி நிறுவனமான சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான (SMBs) வணிக மேலாண்மை தீர்வுகளை அளித்து வரும் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவிலான 'எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ்' விருதுகளின் 3-வது பதிப்பை அறிமுகம் செய்திருந்தது.

இந்த விருதுகளை அளிப்பதன் மூலம், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனமானது பன்முகத்தன்மை, இடைவிடாத பங்களிப்பு மற்றும் நேர்மறை தாக்கம் ஆகிய நிலைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி வருகிறது.

அந்த பாராட்டு என்பது, நாட்டில் உள்ள பெரு நகரங்கள் மற்றும் இதர நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு, நாட்டின் அடித்தட்டுப் பொருளாதார சுழற்சிக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்குபவர்களுக்கான அங்கீகாரம் அளிப்பதை உள்ளடக்கிய நிகழ்வாக அமைகிறது.

நாட்டின் நான்கு மண்டலங்களிலிருந்து (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு) அளிக்கப்பட்ட இந்த விருதுகள் கீழ்க்கண்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன :-

ஒன்டர் உமன் விருது - தங்கள் கனவுகளை நனவாக்கி, அதை வணிக நிறுவன மறுவரையறை செய்து சாதித்த பெண் தொழில்முனைவோரை அங்கீகரித்தல்

பிசினஸ் மேஸ்ட்ரோ விருது - கால மாற்றங்களையும், தொழிலில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகளையும் சமாளித்து தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி நடக்கும் வியாபார ஜாம்பவான்களை அங்கீகரித்தல்.

நியூ ஜென் ஐகான் விருது - சந்தையில் உருவான இடைவெளியைக் கண்டறிந்து புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்தி வென்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அங்கீகரித்தல்

டெக் டிரான்ஸ்பார்மர் - நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காலத்திற்கேற்ப செயல்பட்டு, சிறப்பான விளைவுகளை கண்ட வணிக நிறுவனங்களை அங்கீகரித்தல்

சாம்பியன் ஆஃப் காஸ் - உலகளாவிய நலம் என்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்ட வணிக நிறுவனங்களை அங்கீகரித்தல்

டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம் தனது 3-வது பதிப்பில், எம்.எஸ்.எம்.இ விருதுகள் வழங்கும் நிகழ்வில், சர்வதேச அளவில் 5000-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளுடன் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு 2023 ஜூன் 27 சர்வதேச எம்.எஸ்.எம்.இ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அவை கவுரவிக்கப்பட்டன.

பரிந்துரைகளை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களை இறுதி செய்த மதிப்புமிக்க நடுவர் குழுவின் ஒரு பகுதியாக பங்கேற்றவர்கள் விபரம் வருமாறு :-

  • எம்.கே.ஆனந்த் - நிறுவனர், SEE CHANGE கன்சல்டிங், எம்.எஸ்.எம்.இ குழு தலைவர், ஏ.சி.சி இயக்குநர், தெற்கு எம்.எஸ்.எம்.இ பாரத் மஞ்ச்
  • டாக்டர் இ.பாஸ்கரன் - இணை இயக்குநர் (பொறியியல்), பொது மேலாளர், தொழில் மற்றும் வணிகத் துறை, எம்.எஸ்.எம்.இ துறை, தமிழக அரசு
  • டாக்டர் எச்.பி.குமார் - இயக்குநர், வெளியுறவு, Power2SME பிரைவேட் லிமிடெட்
  • மேஜர் ஜெனரல் சஞ்சய் சோய் (ஓய்வு), ProwS கன்சல்டன்சி இணை நிறுவனர், என்.எஸ்.ஐ.சி முன்னாள் தலைமை மேலாண் இயக்குநர்
  • சதீஷ் ஜான் - நிர்வாக ஆசிரியர், லைவ் மிண்ட்
  • சுஷ்மா மோர்தானியா - இயக்குநர் ஜெனரல், India SME Forum

மெட்ரோ நகரங்கள், அடுக்கு 1, அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 சந்தை பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த பரிந்துரைகள் நடுவர்களுக்கு கிடைத்ததன் மூலம் எம்.எஸ்.எம்.இ துறையின் நெடிய தாக்கம் மற்றும் மதிப்பீட்டு வரம்பு எப்படிப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், 2.3 மில்லியனுக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் உரிமங்கள், 28,000 பங்குதாரர்களுடனான விரிவான சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் இந்திய அளவில் உள்ள 1.35 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய டேலி சொல்யூஷன்ஸின் வலுவான நெட்வொர்க், இந்த குறிப்பிடத்தக்க முன்முயற்சி மூலம் வெளிப்படும் நல் விளைவுகளுக்கு சான்றாக நிற்கிறது.


Full View

தங்கள் உழைப்பு மூலம் புதியவற்றை கண்டறிந்தவர்கள் மற்றும் புதுமையான வணிக தீர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி, சாதித்த வணிக உரிமையாளர்களுக்கும், அவர்களுடன் இணைந்து நின்ற மற்றவர்களுக்கும் டேலி நிறுவனம் தனது மரியாதையை தெரிவிக்கிறது.

அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததுடன், சமூக அளவிலான வளர்ச்சியை ஊக்குவித்து, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றன.

விருதுகள் மற்றும் வெற்றியாளர்கள் பற்றி மேலும் அறிய, https://tallysolutions.com/msme-honours/ என்ற இணையதளத்தை அணுகவும்.

Tags:    

மேலும் செய்திகள்