மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய முர்ரே- காலிறுதிக்கு தகுதிபெற்றார் ஜோகோவிச்

இன்றைய போட்டி நடைப்பெறாமலே நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Update: 2022-05-05 12:36 GMT
Image Courtesy : AFP
மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் தரவரசையில் 78-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நோவக் ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை நடத்த இருந்தார். 

முன்னாள் நம்பர் 1 வீரரான ஆண்டி முர்ரே - தற்போது நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் உடன் மோதுவதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக மோதும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் இன்று போட்டி தொடங்குவதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக முர்ரே இந்த போட்டியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.

இதனால் போட்டி நடைப்பெறாமலே நோவக் ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்