விம்பிள்டன் தொடரில் ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை - நோவக் ஜோகோவிச் கண்டனம்

ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஜோகோவிச் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-21 14:59 GMT
Image Courtesy : AFP
பெல்கிரேட்,

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஏற்கெனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. 

இந்த சூழலில் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க  ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது.

தடை காரணமாக உலகின் 2-ம் நிலையில் உள்ள ரஷிய வீரர் மெத்வதேவ் பங்கேற்க இயலாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீது ரஷியா போரிட்டு வரும் நிலையில் இரு நாட்டு வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தடைக்கு உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " விளையாட்டில் அரசியல் தலையிடும்போது அதன் விளைவு நன்றாக இருக்காது. நான் எப்போதும் போரைக் கண்டிப்பவன்.

போரை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். அதே நேரத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில்  ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது " என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்