வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: கே.எல்.ராகுல், அக்‌ஷர் படேல் விலகல்

இருவருக்கும் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடாவை பிசிசிஐ சேர்த்துள்ளது.

Update: 2022-02-11 13:43 GMT
கோப்புப்படம்
மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டி20 போட்டிகள் வரும் 16-ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், அணியில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோர் காயம் காரணமாக  விலகியுள்ளனர். கே.எல்.ராகுல், நடந்து முடிந்த 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இருவருக்கும் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடாவை பிசிசிஐ சேர்த்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகம்மது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.

மேலும் செய்திகள்