பெல் ஊழியர் மாயம்
பெல் ஊழியர் மாயமானதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே உள்ள பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருபவர் இளையராஜா (வயது 42). இவர் பெல் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 7-ந்் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து இளையராஜாவின் மனைவி சிலம்பரசி சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.