பட்டாசு தொழிலுக்கு சாதகமான தீர்ப்பு வரும்

சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள இறுதி வாய்தாவின் போது எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-06-07 20:37 GMT

சிவகாசி, 

சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள இறுதி வாய்தாவின் போது எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடல்

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நீரி அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய சிவகாசியில் நாளை (வியாழக்கிழமை) சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அப்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நீரி அதிகாரிகளிடம் எடுத்து கூறி நிவாரணம் பெறுவது குறித்து சிப்மா, சிஸ்மா, டாப்மா ஆகிய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து தொழிலை காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

பேட்டி

கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஆசைதம்பி கூறியதாவது,

நாக்பூரில் உள்ள நீரி அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் நாளை (வியாழக்கிழமை) சிவகாசிக்கு வருகிறார்கள்.

இங்குள்ள பட்டாசு ஆலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்து கொண்டு நீரி அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் அளிக்கும் ஆலோசனைகளை கேட்க உள்ளோம்.

அடுத்த மாதம் 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் பட்டாசு குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இது கடைசி வாய்தாவாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கடைசி வாய்தாவில் எங்களுக்கு (பட்டாசு உற்பத்தியாளர்கள்) சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ராஜாசந்திரசேகர், சண்முகையா ரெட்டியார், ஆறுமுகச்சாமி, ராஜப்பன், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்