குத்துச்சண்டை வீராங்கனையின் பயிற்சியாளர் பிரச்சனைக்கு தீர்வு- அதிகாரிகளுக்கு, விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவு

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-26 01:35 GMT

லண்டனில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகம் மீது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டி உள்ளார். காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே என் பயிற்சி நின்று விட்டது எனவும், கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது இதே நிலை ஏற்பட்டதால் தொடர் மிக மோசமாக அமைந்தது எனவும் கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப்பட்டு விட்டதாகவும் இதையெல்லாம் கடந்து பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனின் தனிப்பட்ட பயிற்சியாளர் சந்தியா குருங்கிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதிக்குள் நுழைவதற்கான உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதியை குத்துச் சண்டை பயிற்சியாளர் சந்தியாவு குருங்கிற்கு வழங்க இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்