சென்னையில் நடைபெறவுள்ள 'பார்முலா 4' கார் பந்தயம்: டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்

'பார்முலா 4' கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

Update: 2023-11-27 17:57 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், "ரேசிங் சர்க்யூட் பார்முலா 4" கார் பந்தயம் சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தெற்காசியாவின் முதல் பார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடர் (PAYTM INSIDER) இல் ரூ.1,699 இல் இருந்து ரூ.16,999 வரை பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்