45 கல்லூரிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு சென்னையில் இன்று தொடக்கம்

88-வது கல்லூரிகள் இடையிலான பெர்ட்ராம் விளையாட்டு போட்டி லயோலா கல்லூரியில் இன்று தொடங்குகிறது.

Update: 2022-08-14 21:29 GMT

சென்னை,

லயோலா கல்லூரி சார்பில் கல்லூரிகள் இடையிலான பெர்ட்ராம் நினைவு விளையாட்டு போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெறவில்லை.

இந்த நிலையில் 88-வது கல்லூரிகள் இடையிலான பெர்ட்ராம் விளையாட்டு போட்டி லயோலா கல்லூரியில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் லயோலா, எம்.சி.சி., பனிமலர் என்ஜினீயரிங், ஜமால் முகமது (திருச்சி), காருண்யா (கோவை) உள்பட 45 கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

கேரளாவில் இருந்தும் சில அணிகள் வருகின்றன. கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பால் பேட்மிண்டன், செஸ், கோ-கோ, கபடி ஆகிய 8 போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்