இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது...!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சண்டிகர்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவரது மனைவி ஹசில் கீச். 2016ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரியன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யுவராஜ் சிங்கின் மனைவி ஹசில் கீச் மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் ஹசில் கீச்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதேவேளை பெண் குழந்தைக்கு ஆரா என பெயரிடப்பட்டுள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.