ஸ்டூவர்ட் பிராட்-க்கு புகழாரம் சூட்டிய யுவராஜ் சிங்

ஸ்டூவர்ட் பிராட்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2023-07-30 16:40 GMT

Image Tweet : Yuvraj Sing Twitter 

லண்டன்,

.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போடி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இந்த ஆஷஸ் டெஸ்ட் தனது "கிரிக்கெட்டின் கடைசி ஆட்டம்" என்று அறிவித்துள்ளார் . ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன்மூலம் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் விடைபெற உள்ளார்.

இந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

உங்கள் சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் பிராட் . மிகச்சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் டெஸ்ட் பந்து பந்துவீச்சாளர்களில் நீங்கள் ஒருவர் . உண்மையான ஜாம்பவான்.உங்கள் பயணமும் உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது.என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்