உலக கோப்பை தகுதிச்சுற்று: யு.ஏ.இ அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அசத்தல் வெற்றி

ல் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Update: 2023-06-23 15:47 GMT

ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ரிச்சி பாரிங்டன் சதம் அடித்து அசத்தினார். அவர் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

யு.ஏ.இ. சார்பில் ஜுனைட் சித்திக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ.,  ஸ்கட்லாந்து அணியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணி சார்பில் ஷெரீப் 4 விக்கெட் , கிறிஸ் சோல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்