உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு..!

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.

Update: 2023-11-02 08:35 GMT

image courtesy; twitter/ @ICC

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாத ஒரே அணியான இந்தியா 12 புள்ளிகளுடன் கம்பீரமாக வலம் வருகிறது. அரைஇறுதியை வெகுவாக நெருங்கி விட்ட இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அதிகாரபூர்வமாக எட்டி விடும்.

இலங்கை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 4 தோல்வி கண்டு 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் பணிந்த இலங்கை அடுத்து நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது. கடைசியாக அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அடங்கியது. இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் மெகா வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்து விடும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்