உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!!
இலங்கை - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐதராபாத்,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
உலகக்கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேசம் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் 2-வதாக நடைபெறும் இலங்கை - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸில் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, தில்ஷான் மதுஷங்கா
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.