உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு...!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

Update: 2023-11-08 08:09 GMT

கோப்புப்படம் 

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்