உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு..!!
இங்கிலாந்து - வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
தர்மசாலா,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
வங்காளதேசம்; தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி.