உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Update: 2023-10-12 08:12 GMT

image courtesy; twitter/@ICC

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

ஆஸ்திரேலியா; டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

தென் ஆப்பிரிக்கா; குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.


Tags:    

மேலும் செய்திகள்