பெண்கள் டி20 உலகக்கோப்பை: ரேனுகா அபார பந்துவீச்சு - இந்தியா வெற்றி பெற 152 ரன் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து...!

10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

Update: 2023-02-18 14:39 GMT

Image Courtesy: AFP

கெபேஹா,

10 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக சோபியா மற்றும் வியாட் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் சோபியா 10 ரன், வியாட் 0 ரன் மற்றும் அடுத்து வந்த கேப்சி 3 ரன் என முதல் மூன்று விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் ரேனுகா சிங் வீழ்த்தினார். இதனால் அந்த அணி 29 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

இதையடுத்து களம் புகுந்த ஹெதர் நட் மற்றும் ஸ்கிவர் புருண்ட் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்கிவர் புரூண்ட் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு நல்ல ஒத்துழப்பு தந்த ஹெதர் நைட் 28 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் எமி ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேத்தரின் அடுத்த பந்திலியே ஆட்டம் இழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்