பெண்கள் பிரிமீயர் லீக்: டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு...!
பெண்கள் பிரிமீயர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-குஜராத் அணிகள் மோதுகின்றன.
மும்பை,
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆடும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 லீக் ஆட்டங்களில் ஆடி இருந்தாலும் இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஸ்னே ராணா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.