5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் நாளை தொடக்கம்...!

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை போன்று பெண்களுக்கு பிரிமீயர் லீக் ஆட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்தது.

Update: 2023-03-03 14:35 GMT

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை போன்று பெண்களுக்கு பிரிமீயர் லீக் ஆட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்தது.

அதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (4-ந்தேதி) தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 24 ஆட்டங்கள் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானம், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடக்கிறது. தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது.

டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் பெத் மூனி தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்-ஹர் மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மெக் லானிங்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், உ.பி. வாரியர்சுக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்