'பெண்கள் பிரிமீயர் லீக்': குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ் நியமனம்...!
பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.
மும்பை,
ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இமும்பை, ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது.
இந்நிலையில் அந்த அணி தங்களது அணியின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸை நியமித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், ஆல்ரவுண்டர்கள் துஷார் அரோத்தே மற்றும் கவன் ட்வினிங் ஆகியோர் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் குஜராத் அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.