மகளிர் கிரிக்கெட்: ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி...!

இங்கிலாந்து அணி தரப்பில் ஹெதர் நைட் அவுட் ஆகாமல் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Update: 2023-07-12 19:37 GMT

Image Courtesy: @englandcricket

பிரிஸ்டல்,

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. தொடரில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மூனி அவுட் ஆகாமல் 81 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல், நாட் ஸ்கீவர் புரூண்ட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பெண்கள் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் டாமி பியூமண்ட் 47 ரன், ஷோபியா டங்க்லி 8 ரன், அடுத்து களம் இறங்கிய ஆலிஸ் கேப்சி 40 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹெதர் நைட் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இவருடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கீவர் புரூண்ட் 31 ரன், டேனியல் வியாட் 14 ரன், எமி ஜோன்ஸ் 2 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இங்கிலாந்து பெண்கள் அணி 48.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெதர் நைட் அவுட் ஆகாமல் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்