பயிற்சியில் தோனி - சென்னை அணி பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்
தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி , மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சி.எஸ்.கே. அணி தற்போது 3 வெற்றி , 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை அணி வீரர் டேவான் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது, இந்த நிலையில் சென்னை அணி தோனி பயிற்சயில் ஈடுபட்ட புகைப்படங்களை பகிர்ந்ததால் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்ட தோனி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காயத்துடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Minnal Mahi Mode Activated! ⚡️#WhistlePodu #Yellove #IPL2023 @msdhoni pic.twitter.com/dMUvFQix4L
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2023