உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்...சிரித்துக்கொண்டே பதிலளித்த சவுரவ் கங்குலி...!
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன.
இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி ஆசிய நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிதான் உலக கோப்பை தொடரிலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியாது எனவும் இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா ஒரு அணி மீது மட்டும் கவனம் செலுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு ஆட்டத்தையும் சரியாக விளையாடதான் முயற்சிப்பார்கள். இறுதிப் போட்டிக்கு வருவார்கள், சிறந்த ஆட்டத்தையே எதிர்பார்க்கிறேன்.
உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்தியா உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கங்குலி கூறினார்.