தொடரை வெல்லப்போவது யார்? - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு...!

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது.

Update: 2023-01-13 09:14 GMT

Image Courtesy: ICC Twitter 

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.

இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தொடரி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்