இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-29 09:01 GMT

image courtesy; BCCI

மும்பை,

50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியது. டிராவிட் தொடராத பட்சத்தில் தலைமை பயிற்சியாளர் பதவியை விவிஎஸ் லட்சுமணன் ஏற்பார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியது.

இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் டிராவிட் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரின் பதவிக்காலத்தையும் நீட்டித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்