உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி எங்கு நடைபெறும் ? வெளியான தகவல்

உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதாங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-05-05 09:38 GMT

Image Courtesy : ICC 

சென்னை,

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.இந்த தொடர் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதாங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி தேர்வு செய்துள்ள மைதானங்களில் சென்னை, பெங்களூர், அகமதாபாத், மும்பை, நாக்பூர், டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், ராஜ்கோட், கொல்கத்தா, திருவனந்தபுரம், இந்தூர், தர்மசாலா ஆகிய மைதானங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. . தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தான் மற்ற அணிகளுடன் விளையாடும் போட்டிகள் சென்னை மற்றும் பெங்களூர் மைதானங்களில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்