'யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா' - மும்பை மைதானமே அதிர்ந்த 'வி வாண்ட் டோனி' கோஷம்

சென்னை - மும்பை இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2023-04-09 07:36 GMT

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்த ரஹானே கேட்ச் மூலம் அவுட் ஆனார். ஆனால், ருதுராஜ் கெய்குவாட் மற்றும் அம்பதி ராயுடு ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை நெருங்கிய போது கேப்டன் டோனி களமிறங்க தயாரானார். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் 'வி வாண்ட் டோனி' என்று கோஷமிட்டனர். இதனால், வாங்கடே மைதானமே திணறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பிய 'வி வாண்ட் டோனி' கோஷம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்