நாங்கள் விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம் - ஐதராபாத் பயிற்சியாளர் லாரா

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

Update: 2023-05-19 06:55 GMT

ஐதராபாத்,

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், நாங்கள் விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம். நடப்பு தொடரில் பெங்களூருக்கு சிறப்பாக ஆடிவரும் டூபிளசிசை எதிர்கொண்டோம். அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் தற்போது டூபிளசிஸ் முதல் இடத்தில் உள்ளார். . ஒட்டுமொத்தமாக உலகத்தரம் வாய்ந்த 2 வீரர்களை நாங்க்சள் எதிர்கொண்டோம். ஒட்டுமொத்தமாக எங்கள் அணியினர் நல்ல முயற்சி மேற்கொண்டனர் என நான் நினைக்கிறேன். 

Tags:    

மேலும் செய்திகள்