டிஎன்பிஎல்: திருப்பூர் அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை
20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்பிற்கு160 ரன்கள் எடுத்தது
நெல்லை,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்டன. பிளே-ஆப் சுற்றில் கால்பதிக்கும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இந்த ஒரு இடத்திற்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்றைய முக்கியமான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் சுரேஷ் லோகேஸ்வர், ஹரி நிஷாந்த் இருவரும் அதிரடியாக விளையாடினர்.பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டு சிறப்பாக விளையாடினர்.
தொடக்க விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரி நிஷாந்த் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆதித்யா அதிரடி காட்டினார்.
மறுபுறம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் லோகேஸ்வர் 44 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து 37 ரன்களில் வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ரன்கள் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடுகிறது.