இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது டி-20 ஆட்டம் இன்று நடக்கிறது

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

Update: 2023-08-12 00:01 GMT

Image Courtesy : @windiescricket twitter

புளோரிடா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 3-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி-20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ரோவ்மேன் போவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்க கூடாது நோக்கத்துடன் ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான இந்திய அணியும் களமிறங்க உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்