டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் நெட் பவுலர்களாக சேர்ப்பு...!

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

Update: 2023-02-03 13:35 GMT

கோப்புப்படம்

நாக்பூர் ,

4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளது.

இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக இந்திய அணி நாக்பூரிலும், ஆஸ்திரேலிய அணி பெங்களூருவிலும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கி உள்ளனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் நெட் பவுலர்களாக 4 சுழற்பந்து வீச்சாளர்களை சேத்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. அணியில் அஷ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்ய மேலும் 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் நெட் பவுலர்களாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சவுரப் குமார், சாய் கிரிஷோர், வாஷிங்டன் சுந்தர், ராகுல்சாஹர் ஆகிய 4 பேரும் அணியில் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்