சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் ..! மும்பை அணி 218 ரன்கள் குவிப்பு
சூர்யகுமார் யாதவ் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மும்பை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர் . தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு சேர்த்த 61 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நேஹால் வதேரா 15 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் , அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டார்.சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.குஜராத் அணியின் ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சூர்யகுமார் யாதவ் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார்.