தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா- கிரிக்கெட் தொடர்; 2-வது டி20 இன்று..!!

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

Update: 2023-09-01 11:56 GMT

image courtesy; twitter/@ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 226 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 115 ரன்களில் ஆட்டம் இழந்தது. அறிமுக வீரர் தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்றிரவு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்கள். சொந்த மண்ணில் தொடரை இழக்க கூடாது என்பதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிர முனைப்புடன் உள்ளனர். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 

Tags:    

மேலும் செய்திகள்