பந்துவீச்சில் மிரட்டிய ஷமி...! பொறுப்புடன் ஆடிய அமன் கான்..! 131 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி

குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.

Update: 2023-05-02 15:43 GMT

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 44-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 1 ரன்னிலும், பிரியம் கர்க் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தொடர்ந்து வந்த அக்சர் படேல் , அமான் கான் இணைந்து சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடி இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அக்சர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரிபல் படேல் , அமான் கான் இருவரும் இனைந்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் . சிறப்பாக விளையாடிய அமான் கான் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 8விக்கெட் இழப்புக்கு 130ரன்கள் டெல்லி எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து131 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடுகிறது

Tags:    

மேலும் செய்திகள்