பீல்டிங்கின் போது காயம்; 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சிக்கல்...! - மாற்று வீரர் யார்?

பீல்டிங்கின் போது காயம் ஏற்பட்டதால் 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-04 15:31 GMT

புனே,

இந்தியா - இலங்கை இடையே நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக புனேவில் நாளை நடைபெற உள்ள 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

'ஸ்கேன் எடுப்பதற்காக சாம்சன் மும்பையிலேயே இருப்பார்' என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை நடைபெறும் 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை என்றால் ராகுல் திரிபாதி விளையாடுவார் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்