சச்சின் டெண்டுல்கரின் நண்பர்கள் தின டுவிட்
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்த பழைய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய நண்பர்களுடன் எடுத்த பழைய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,' நட்பைக் கொண்டாடுவோம்! இன்று நண்பர்கள் தினம். இன்றைய தினத்தில் எனது நண்பர்களையும், என் முகத்தில் உடனடி புன்னகையை வரவழைக்கும் அந்த விலைமதிப்பற்ற நினைவுகளையும் நினைவு கூர்கிறேன். இன்று வரை அவர்களுடன் தொடர்பில் இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உங்களின் நண்பர்களைக் குறிப்பிட்டு அவர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்' என பதிவிட்டு உள்ளார்.